No products in the cart.
அமெரிக்காவில் இந்திய மருத்துவர் மர்ம நபரால் சுட்டுக் கொலை
அமெரிக்காவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் பல் மருத்துவர், மர்ம நபரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் சனிக்கிழமை (4) ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
ஹைதராபாத் பிஎன் நகரைச் சேர்ந்தவர் போலே சந்திரசேகர். இவர் பிடிஎஸ் பட்டப்படிப்பை முடித்து விட்டு, கடந்த 2023-ம் ஆண்டு மேற்படிப்புக்காக அமெ ரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டல்லஸ் நகரில் குடியேறினார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மேற்படிப்பு முடித்த சந்திரசேகர், அங்கு ஒரு நிரந்தர வேலையை தேடிக்கொண்டே, ஒரு காஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று அதிகாலையில் அடையாளம் தெரியாத நபர் சந்திரசேகரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாகி விட்டார். தகவல் அறிந்த போலே சந்திரசேகரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருகின்றது.