No products in the cart.
திக்வெல்ல கடலில் நீராட சென்ற மூவரில் ஒருவர் பலி
திக்வெல்ல கடலில் நீராட சென்ற மூன்று பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த அனர்த்தம் இன்று (06) பிற்பகல் 3.30 மணியளவில் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீரில் அடித்து செல்லப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கு பிரதேச மக்கள் முயற்சித்துள்ள நிலையில், இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு பேரும் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் மதவியங்கொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என்பதுடன், 51 மற்றும் 38 வயதுடைய இருவரே வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.