இலங்கை

NDTV உலக உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ள ஹரினி

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் கலந்து கொள்ள உள்ளார். 

NDTV உலக உச்சி மாநாடு 2025, உலகளாவிய ரீதியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இந்த மாநாட்டில் உலகில் தற்போது மிகவும் செல்வாக்கு மிக்க சில பிரபலங்களை ஒன்றிணைக்கும் என கூறப்படுகின்றது. 

அவர்களில் தற்போது பதவியில் இருக்கும் இரண்டு பிரதமர்களான இந்தியாவின் நரேந்திர மோடி மற்றும் இலங்கையின் ஹரிணி அமரசூரிய மற்றும் இரண்டு முன்னாள் பிரதமர்களான பிரித்தானியாவின் ரிஷி சுனக் மற்றும் அவுஸ்திரேலியாவின் டோனி அபோட் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர். 

இந்த உச்சி மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் புதுடில்லியில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…