இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம் பெறவில்லை.
இதனையடுத்து இந்திய அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த இரு அணிகளுக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் முகமது ஷமி இடம்பெறவில்லை.
காயம் காரணமாக சில தொடர்களில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இதனையடுத்து காயத்தில் இருந்த மீண்ட அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். ஆனாலும் இந்திய அணிக்கான தேர்வில் அவர் இடம்பெறவில்லை.
இந்நிலையில் அணியில் இடம்பெறாதது என் கையில் இல்லை என முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறாதது குறித்து எனது கருத்தை மக்கள் அறிய விரும்புகிறார்கள். தேர்வு செய்வது என்னுடைய கைகளில் இல்லை. தேர்வு செய்வது தேர்வு குழு, பயிற்சியாளர், கேப்டனின் வேலை.
நான் அங்கு இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தால், அவர்கள் என்னைத் தேர்ந்தெடுப்பார்கள். அல்லது இன்னும் சிறிது நேரம் தேவை என்று அவர்கள் உணர்ந்தால், அது அவர்களின் கைகளில் உள்ளது.
இவ்வாறு முகமது ஷமி கூறினார்.
கிட்டதட்ட முகமது ஷமியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக கிரிக்கெட் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மவுனம் கலைத்த முகமது ஷமி
