இலங்கை

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இலங்கை நடிகை மிட்செல்!

இலங்கையில் இருந்து தென்னிந்திய சினிமாவில் நடித்து வரும் இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

அந்த வகையில் இலங்கையை சேர்ந்த நடிகை மிட்செல் தில்ஹாரா, நடிகர் சமுத்திரகனி  நடிக்கும் படத்தில் நாயகியாக நடித்து வருகின்றார்.

தெலுங்கு படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்து வரும் சமுத்திரகனி, தமிழில் கதையின் நாயகனாகவே நடிக்க விரும்புகிறார்.

கடைசியாக ‘ராமம் ராகவம்’ படத்தில் நடித்தார். இது தமிழ், தெலுங்கில் வெளியானது.

இந்த நிலையில் தற்போது பைலா என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் ரம்யா நம்பீசன், ராஜ்குமார், இலங்கையை சேர்ந்த நடிகை மிச்சலா, யோகிபாபு, இளவரசு, சிங்கம்புலி, மதுமிதா, ஆண்ட்ரூ, என்.இளங்கோ ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை கே.வீரக்குமார் இயக்குகிறார். கலா தியேட்டர்ஸ் சார்பில் ராசய்யா கண்ணன் தயாரிக்கிறார். சனுகா இசைஅமைக்க, ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…