இலங்கை

வங்கிக் கணக்கிலிருந்து 5.69 இலட்சம் ரூபாய் மோசடி: நால்வர் கைது

2024 மே 29 அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண கணினி குற்றப்பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து 569,610 ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நால்வர் நேற்று ( 14) கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 38 வயதுடைய தெஹிதெனிய மற்றும் முருதலாவ பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் இணையதளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நீர் மோட்டார் ஒன்றை வாங்குவதாகக் கூறி, அதற்காக முன்பணம் செலுத்துவதாக கூறி, விற்பனையாளரின் வங்கிக் கணக்கின் OTP இலக்கத்தைப் பெற்று,  பணத்தை மோசடி செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பண மோசடி, தவறான பயன்பாடு மற்றும் நம்பிக்கைக்கு புறம்பாக நடந்துகொள்ளல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ஒருவரும், அவருக்கு உதவிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (15) வாரியபொல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண கணினி குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…