இலங்கை

பொலிஸ் அத்தியட்சகர் ஹேமால் பிரசாந்த ஏன் இடமாற்றப்பட்டார்?

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமால் பிரசாந்த இடமாற்றம் செய்யப்பட்டமை அவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை நிமித்தமாகவே என பொலிஸ் தலைமையக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தகவல் தெரிவிப்பவர்களுக்கு வழங்க வேண்டிய 5 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியமை, நிர்வாக பலவீனங்கள் மற்றும் மூன்று மாதங்களுக்குள் போதைப்பொருள் சோதனைகளை முறையாக நடத்தத் தவறியமை உள்ளிட்டவை அவர் மீதான குற்றச்சாட்டுகளில் அடங்குகின்றன. 

5 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியமை குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே விசாரணைகளை தொடங்கியுள்ளது. 

அதன்படி, அவரை இடமாற்றம் செய்ய செப்டம்பர் 25 ஆம் திகதி பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, நேற்று (15) அதனுடன் தொடர்புடைய உத்தரவு கிடைத்த நிலையில், அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையக வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன. 

எவ்வாறாயினும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமல் பிரசாந்தவின் இடமாற்றம் தொடர்பாக இதற்கு முன்னர் வௌியாகியுள்ளதாக தகவல்களும் முற்றிலும் தவறானவை என்று பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…