இலங்கை

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளருக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாச பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

2019 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற புனரமைப்பு பணிகளில் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களை முறைக்கேடாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் இன்று கைது செய்யப்பட்டிருந்தார். 

அதன்படி, சந்தேக நபரை தலா 1 மில்லியன் ரூபாய் வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, சந்தேக நபருக்கு பயணத் தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளார். 

மேலும், சாட்சியாளர்களுக்கு அழுத்தம் வழங்குவதை தவிர்க்குமாறு சந்தேக நபருக்கு நீதவான் நிபந்தனை விதித்துள்ளார். 

இந்நிலையில் குறித்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…