சினிமா

சல்மான், ஷாரூக் உடன் இணைந்து நடிக்கும் அமீர் கான்

பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார்களான ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த ஒரு நிகழ்வில் ஒன்றாக கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய சல்மான் கான், 

‘எங்கள் மூவரையும் (ஷாருக்கான், சல்மான் கான், ஆமிர் கான்) நாங்கள் ஒருபோதும் ஸ்டார்கள் என்று கருத்திக்கொண்டதில்லை’ என தெரிவித்தார். 

இதனையடுத்து பேசிய ஷாருக் கான், 

‘அமீர்கான் மிகசிறந்த நடிகர். ஒரு கதையைச் சொல்ல அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார். 

சல்மான் கான் அவரது இதயத்திலிருந்து மிக சுதந்திரமாக வேலையை செய்கிறார். நான் இந்த இரண்டையும் ஒன்றிணைக்க முயற்சிக்கிறேன்’ என தெரிவித்தார். 

இறுதியாக பேசிய அமீர் கான், 

‘நாங்கள் மூவரும் ஒரே படத்தில் ஒன்றாக நடிக்க தயாராக இருக்கிறோம். அதற்கேற்ற சரியான கதை அமைந்தால் நாங்கள் மூவரும் ஒரே படத்தில் நடிப்போம்’ என தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பாடசாலை தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை…