சினிமா

தொண்டர்களுக்கு த.வெ.க. அறிவுறுத்தல்!

கடந்த மாதம் 27 ஆம் திகதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பிறகு த.வெ.க.வினர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையோ, கொண்டாடுவதையோ தவிர்த்து வருகின்றனர். 

இந்த நிலையில், கரூர் துயரத்தில் பங்கேற்கும் விதமாக த.வெ.க.வினர் யாரும் இந்தாண்டு தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று த.வெ.க. சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவிக்கையில், 

த.வெ.க சார்பில் யாரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். கரூர் சம்பவத்தால் நம்மை விட்டு பிரிந்த சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

உண்மை சம்பவமா?

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான படங்களில் செம ஹிட்டடித்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.3 ஆவது வாரத்தை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இப்படம் ரூ. 75 கோடி வசூலைத் தாண்டி செம கலெக்ஷன் செய்து வருகிறது. டூரிஸ்ட் பேமிலி படத்தை தொடர்ந்து சசிகுமார்…