இலங்கை

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியாட்சகரின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இருவரும் 20 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யபட்டுள்ளனர். 

சுமார் 25 மற்றும் 23 வயதான குறித்த நபர்கள் கைதான போது குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்து தப்பிக்கவும் முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேநேரம் குறித்த இருவருள் ஒருவர் வன்முறை கும்பல்களுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த நபரிடமிருந்து அபாயகரம் மிக்க வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் யாழ் குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே நேற்றைய தினம் கைதான இருவருடன் ஐஸ் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடைய 6 பேர் கடந்த சில தினங்களுக்குள் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…