இலங்கை

உழவு இயந்திரத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி நபர் ஒருவர் செலுத்திச் சென்ற உழவு இயந்திரம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

குறித்த உழவு இயந்திரத்தை நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரிகள் கட்டளையிட்ட போதிலும், அதன் சாரதி பொலிஸ் அதிகாரிகளை மோதி ஆபத்தை ஏற்படுத்த முயற்சித்ததாக கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

இதனையடுத்து, பொலிஸார் உழவு இயந்திரத்தின் சக்கரத்தை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக அத தெரண செய்திகளுக்கு அந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார். 

கடந்த 24 ஆம் திகதி இச்சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

துப்பாக்கிச் சூட்டினால் உழவு இயந்திரத்தின் சக்கரம் சேதமடைந்துள்ளது. 

குறித்த உழவு இயந்திரத்தை செலுத்திய 18 வயதுடைய இளைஞனும் காயமடைந்ததாக கூறப்படும் நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…