சினிமா

‘ஜூடோபியா – 02’ வௌியீட்டு திகதி அறிவிப்பு

வேர்ல்ட் டிஸ்னியின் அனிமேஷன் திரைப்படமான ‘ஜூடோபியா’ 2016ம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. 

அந்த ஆண்டின் சிறந்த அனிமேஷன் படத்திற்காக ஒஸ்கார் விருதையும் பெற்றது. 

இதன் இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பல்வேறு காரணங்களால் வேர்ல்ட் டிஸ்னி இரண்டாம் பாகத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தது. 

இந்த நிலையில் அடுத்த மாதம் 28ம் திகதி படம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆங்கிலத்துடன் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 

முதல் பாகத்தில் ரசிகர்களை குறிப்பாக குழந்தைகளை ஈர்த்த காவல்துறை அதிகாரிகளான ஜூடி ஹாப்ஸ் (ஜின்னிபர் குட்வின் குரல்) மற்றும் நிக் வைல்ட் (ஜேசன் பேட்மேனின் குரல்) ஆகியோர் இந்த பகுதியிலும் தங்கள் சாகசத்தை தொடர்கிறார்கள். 

இருவரும் கேரி டி’ஸ்னேக் (கே ஹுய் குவானின் குரல்) உடன் இணைகிறார்கள். முதல் பாகத்தை இயக்கிய ஜாரெட் புஷ், பைரன் ஹோவர்ட் ஆகியோரே இதனையும் இயக்கி உள்ளனர்.

What's your reaction?

Related Posts

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பாடசாலை தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை…