இலங்கை

பியல் மனம்பேரி மீண்டும் விளக்கமறியலில்

மித்தெனிய பிரதேசத்தில் ஐஸ்போதைப்பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பியல் மனம்பேரி மற்றும் மின்சார சபையின் ஊழியர் ஆகியோருக்கான வழக்கு இன்று (29) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

காணொளித் தொழில்நுட்பம் ஊடாக இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது. 

அதன் பின்னர், அவர்கள் இருவரையும் அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வலஸ்முல்ல நீதவான் மல்ஷா கொடித்துவக்கு உத்தரவிட்டார். 

மித்தெனிய, தலாவ பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டிருந்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…