இலங்கை

யாழில் 3 மாதங்களேயான குழந்தை பலி!

யாழ்ப்பாணத்தில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று (29) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. 

யாழ்ப்பாணம் – கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினரின் குழந்தையே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

குறித்த பெண் குழந்தை கடந்த ஜூலை மாதம் 23 ஆம் திகதி பிறந்துள்ளது. 

இன்றையதினம் குழந்தையின் தாயார் குழந்தைக்கு பாலூட்டிய சிறிது நேரத்தில் அந்த குழந்தை திடீர் சுகவீனமுற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து அந்த குழந்தையை பெற்றோர் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு உடனடியாகக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். 

எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே குழந்தை இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…