இலங்கை

விருந்துபசாரத்திற்கு மத்தியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது

ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் T56 ரக துப்பாக்கியால் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தது, மற்றுமொருவர் காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தக் குற்றம் 2025.04.29 அன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபர் நேற்று (30) ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தக் குற்றம் தொடர்பில் பாணந்துறை குற்றத்தடுப்பு விசாரணை பணியகத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 

அதன்படி, குற்றத்தடுப்பு விசாரணை பணியகத்தின் அதிகாரிகள் குழுவால், இந்தக் குற்றத்தின் சந்தேகநபர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய மற்றும் தப்பிச் செல்வதற்கு உதவிய சந்தேகநபர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டு, ஹிரண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் 40 வயதுடைய மொறவின்ன, பாணந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் ஹிரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…