இலங்கை

முன்னாள் பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகர் கைது

முன்னாள் நிதி அமைச்சின் செயலாளரும் முன்னாள் பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே கைது செய்யப்பட்டுள்ளார். 

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

2015 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகராக செயற்பட்ட காலத்தில் எவ்வித தேவைப்பாடுகளும் இன்றி தானியங்களை சேமித்து வைக்கும் தற்காலிக 50 களஞ்சியசாலைகளை உருவாக்குவதற்கான பொருட்களை இறக்குமதி செய்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

இதன்மூலம் அரசாங்கத்திற்கு 99,679,799 ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் அவர் இன்று காலை 8.25 அளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…