இலங்கை

2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு

2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு2026ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண நகரை அழகுபடுத்தும் திட்டங்களுக்கு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களுடனான சந்திப்பின் போது வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இவ்வுறுதியைத் தெரிவித்தனர். ஆளுநர் செயலகத்தில் நேற்று (04) மாலை நடைபெற்ற இச்சந்திப்பில், வர்த்தக சங்கத்தால் பல்வேறு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டு, அவை தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. நகர அழகாக்கல், சுற்றுலா உட்கட்டமைப்பு மேம்பாடு, வர்த்தக வசதிகள் உள்ளிட்ட விடயங்களில் இணைந்து செயற்படுவது குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…