இலங்கை

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் குறித்து வௌியான தகவல்

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர், குற்றவியல் குழு உறுப்பினர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற ‘பூகுடு கண்ணா’ என்பவரின் சகா என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். கார் ஒன்றில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 43 வயதுடைய நபர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…