இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தையாரும், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான சி. மூ. இராசமாணிக்கம் அவர்களின் புதல்வருமான வைத்தியர் இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் நேற்று (07) பிற்பகல் இறைவனடி சேர்ந்தார். காலமாகும் போது அவரது வயது 67 ஆகும். (பிறப்பு: 13.06.1958, இறப்பு: 07.11.2025) அன்னாரின் திருவுடல் இன்று சனிக்கிழமை (08) பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை Jayaratne Respect Home-இல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், அன்னாரின் திருவுடல் நாளை (09) மாலை 6.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…