இலங்கை

அமெரிக்க ஆதரவை பாராட்டிய இலங்கை அரசாங்கம் !

இலங்கையின் பொருளாதார மீட்சி திட்டத்தின் ஒரு பகுதியாக சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி  திட்டத்திற்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவை இலங்கை அரசாங்கம் பாராட்டியுள்ளது.

“இலங்கை தற்போது IMF இன்  நிதி வசதி திட்டத்தின் கீழ் பொருளாதார மீட்சியை நோக்கி பயணித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த 44% பரஸ்பர வரி தொடர்பாக, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக சமநிலையை நியாயமாக நிர்வகிக்கும் வழிகளை ஆராய அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம். ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், இரு நாடுகளும் புதிய வளர்ச்சி யுகத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பைப் பெற முடியும்,” என இலங்கை நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…