No products in the cart.
கொழும்பை வந்தடைந்த போர்க்கப்பல்!
இந்திய கடற்படைக் கப்பலான ‘ஐஎன்எஸ் சயாத்ரி’ உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று 05 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
‘ஐஎன்எஸ் சயாத்ரி’ 143 மீட்டர் நீளமுள்ள ஒரு போர்க்கப்பலாகும். இக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க வரவேற்றுள்ளனர்.
ஐஎன்எஸ் சயாத்ரி குழுவினர் தங்கள் வருகையின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படை நடத்தும் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர். மேலும் நாடு முழுவதும் உள்ள பல சுற்றுலா தலங்களையும் அவர்கள்பார்வையிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தகப்பல் மீண்டும் ஏப்ரல் 07ஆம் திகதியன்று கொழும்பிலிருந்து புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.