சினிமா

பிரபல நடிகர் காலமானார்!

இயக்குனர் கே.பாலச்சந்தரின் ‘அவர்கள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி ‘பகலில் ஒரு இரவு’, ‘சிவாஜி’ போன்ற பல படங்கள்  மற்றும் சித்தி, வாணிராணி உட்பட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரவிக்குமார்.

71 வயதான இவர் உடல் நலக்குறைவால் சென்னை வேளச்சேரியில் உள்ள மருத்துவ மனையொன்றில் அனுமதிக்ககப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று  (05 ஆம் திகதி) காலை 10.30 மணி அளவில் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் மற்றும் மலையாள திரை உலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பாடசாலை தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை…