இலங்கை

முன்னாள் அமைச்சர்கள் பெற்றுக்கொண்ட இழப்பீடுக்கு எதிரான மனு விசாரணைக்கு

சட்டத்திற்குப் புறம்பாக இழப்பீடு பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து அந்த இழப்பீட்டுப் பணத்தை மீளப் அறவிடுவதற்கான உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது, தமது வீடுகள் தீக்கிரையானதால் ஏற்பட்ட சேதங்களுக்காகச் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்திற்குப் புறம்பாக நஷ்டஈடு பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

அதன்படி குறித்த மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது. 

சுற்றுச்சூழல் சட்டத்தரணியான கலாநிதி ரவீந்திரநாத் தாபரேவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…