உலகம்

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 65 அமெரிக்க டொலருக்குக் கீழ் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று 04ஆம் திகதி 8% சரிந்து, 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்றுநோயின் உச்ச காலத்தில் இருந்த மிகக் குறைந்த விலையை பதிவு செய்துள்ளது.

அதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 65 அமெரிக்க டொலருக்குக் கீழ் சரிந்துள்ளது. ஓபெக் அமைப்பு எதிர்பாராத வகையில் தனது உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்தது. மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய இறக்குமதி வரிகளை அறிவித்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய சதவீத இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விலை வீழ்ச்சி உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…