இலங்கை

GMOA நாளை தொழிற்சங்க நடவடிக்கையில்!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை (17) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. 

2026 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளை முறையாகத் தீர்க்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்துள்ளனர். 

இது தொடர்பாக அரசாங்கத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதற்குச் சாதகமான பதில் கிடைக்காததால் தமது சங்கம் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்ததாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…