கால்பந்துவிளையாட்டு

உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிக்கு தகுதிப் பெற்ற போர்த்துகல்!

23-வது ‘பிபா’உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிக்கு போர்த்துகல் அணி தகுதிப் பெற்றுள்ளது. 

23-வது ‘பிபா’ உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் இடம்பெறவுள்ளது. 

இந்த போட்டியில் பங்கேற்கும் 48 அணிகளில் போட்டியை நடத்தும் நாடுகளை தவிர்த்து மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும். 

கண்டங்கள் வாரியாக பல்வேறு நாடுகளில் நடக்கும் தகுதி சுற்று இறுதி கட்டத்தை எட்டி விட்டது. 

இந்நிலையில், உலகக் கிண்ண தகுதி சுற்று போட்டியில் இன்று அர்மீனியா – போர்த்துகல் மோதின. 

இதில் 9-1 என்ற கோல் கணக்கில் அர்மீனியாவை வீழ்த்தி போர்த்துகல் அபார வெற்றிபெற்றது. 

அணியின் தலைவர் ரொனால்டோ இல்லாமலேயே அர்மீனியாவை போர்த்துகல் வீழ்த்தியது. 

ஏனெனில் கடந்த போட்டியில் ரெட் கார்ட் வாங்கியதால் இந்த போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 

எனினும் இந்த வெற்றியின் மூலம் உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடருக்கு போர்த்துகல் அணி தகுதி பெற்றுள்ளது. 

அத்துடன் 6வது முறையாக உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் ரொனால்டோ பங்கேற்க உள்ளார்.

What's your reaction?

Related Posts

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின்…