இலங்கை

எமிரேட்ஸ் விமானம் கட்டுநாயக்காவில் அவசரமாகத் தரையிறக்கம்!

டுபாயில் இருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK – 434 அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 

நேற்று (20) இரவு இந்த அவசரத் தரையிறக்கம் இடம்பெற்றதாக ‘அத தெரண’ விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். 

விமானத்தில் பயணித்த ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாகவே இந்தத் தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்பின், அந்தப் பயணி மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான இந்த A380 வகை விமானம் நேற்று இரவு 7.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கி, பின்னர் இரவு 9.20 மணியளவில் மீண்டும் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…