இலங்கை

கிங், நில்வளா கங்கைகளில் வெள்ள அபாயம்

கிங் மற்றும் நில்வளா நதிப் படுக்கைகளின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாகச் சிறியளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது. 

நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்: 

கிங் கங்கை: நெலுவ, தவலம, நாகொட, நியாகம, வெலிவிட்டிய-திவிதுர, எல்பிட்டிய மற்றும் அக்மீமன ஆகிய பகுதிகள். 

நில்வளா கங்கை : பஸ்கொட, கொட்டபொல, பிட்டபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, கம்புறுபிட்டிய மற்றும் திஹகொட ஆகிய பகுதிகள். 

இதேவேளை, நீர்மட்டம் அதிகரிப்பு காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 04 வான் கதவுகளும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. 

எதிர்வரும் நாட்களில் நாட்டின் மழை நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். 

தொடர் மழை காரணமாக, 9 மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கைகளைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…