விளையாட்டு

ஹாக்கி போட்டியைக் காண்பதற்கு இலவச டிக்​கெட்

உலகக் கோப்பை ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டியைக் காண்பதற்கு இரசிகர்​களுக்கு இலவச டிக்​கெட் வழங்கப்படவுள்​ளது.

சென்​னை, மதுரை​யில் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் டிசம்​பர் 10 ஆம் திகதி வரை ஆடவருக்​கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடை​பெற உள்ளது.

இந்த தொடரில் 24 அணி​கள் பங்​கேற்று விளை​யாட உள்ளன.

ஜூனியர் உலக கோப்​பை​யில் அதிக அணி​களும், அதிக போட்​டிகளும் நடை​பெறும் தொட​ராக இது அமைந்​துள்​ளது.

இந்​நிலை​யில் மாணவர்​கள், இளம் விளை​யாட்டு வீரர்​கள், குடும்பத்​தினர், ஹாக்கி விளை​யாட்டை விரும்​புபவர்​கள் போட்டியை நேரில் கண்​டு​களிக்​கும் வகை​யில் இலவச டிக்​கெட் வழங்​கப்பட உள்​ளது என ஹாக்கி இந்தியா அமைப்​பின் தலை​வர் திலீப் திர்கே தெரி​வித்​துள்​ளார்.

நிகழ்நிலை மற்றும் ஹாக்கி இந்​தியா செல்​போன் செயலி மூலம் ரசிகர்​கள் இலவச டிக்​கெட்டை பெற்​றுக் கொள்​ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

WTC 2025 இறுதிப்போட்டி – தென்னாபிரிக்கா அணிக்கான வெற்றி இலக்கு இதோ!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2025 இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி ஜூன் 11 முதல் 15 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது, இதில் அவுஸ்திரேலியா மற்றும் தென்…