உலகம்

7 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் பறிமுதல்!

இந்தியாவின் கேரளாவில் போதைப் பொருள் பயன்படுத்து பவர்கள் சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் பொலிஸார் அதனை கட்டுப்படுத்த அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஆபரேசன் ‘டி’ என்ற பெயரில் மாநிலம் முழு வதும் கடந்த மாதம் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் மாநிலத்தின் பல பகுதிகளிலும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. எம்.டி.எம்.ஏ., ஹெராயின், மெத்தம்பேட்டமைன், பிரவுன் சுகர், நைட்ரஸெபம் மாத்திரைகள், கஞ்சா, கஞ்சா சாக்லெட்டுகள், எரிசாராயம் என பல்வேறு வகையிலான போதை வஸ்துகள் பொலிஸாரின் வேட்டையில் சிக்கின.

மாநிலம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு 7 கோடியே 9 லட்சம் ரூபாவாகும். இது தொடர்பாக 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதவிர கலால் துறை தொடர்பான வழக்குகளில் தலைமறைவான குற்றவாளிகள் உள்பட1,501 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…