இந்தியா

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல்

சென்னைவங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் க்கு தென்கிழக்கே 220 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிட்வா புயல் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையில் இருந்து இன்று மாலை குறைந்தபட்சம் 70-30 கி.மீ. தொலையில் மையம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

கடலில் இருந்து மேலும் விலகி சென்னைக்கு 70 கி.மீ. தூரம் வரை மட்டும் டிட்வா புயல் நகரும் என்றும் அதற்கு பிறகு டிட்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக படிப்படியாக வலுவிழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

தாயின் கண்முன்னே சிறுத்தை தூக்கிச்சென்ற சிறுமி சடலமாக மீட்பு

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி (6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர். மனோஜ் முந்தா கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பச்சைமலை…