No products in the cart.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் சரிந்த மண்மேடுகளை அகற்றும் பணிகள் தீவிரம்
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் சரிந்த மண்மேடுகளை அகற்றும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஹட்டன், வட்டவளை, தியகல மற்றும் களுகல ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு மண்மேடுகள் சரிந்துள்ளன.
தற்போது, ஒரு வழித்தடத்தைத் திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள், தனியார் உரிமையாளர்களால் வழங்கப்பட்ட பாரிய பெக்கோ இயந்திரங்கள் மூலம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருப்பினும், குறித்த வீதியில் மேலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















