இலங்கை

பயிர் சேதங்கள் குறித்து அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்

‘டித்வா’ புயலின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள விவசாயிகளின் பயிர் சேதங்கள் குறித்து அறிவிப்பதற்கு விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை பல வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

அதற்கமைய, 1918 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலம் விவசாயிகள் பயிர் சேதங்கள் குறித்து மிக இலகுவாக அறிவிக்க முடியும். 

‘டித்வா’ புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு சேதம் ஏற்பட்டது. 

அதற்கமைய, குறித்த பயிர்களுக்கான நட்டஈட்டை வழங்கும் எதிர்பார்ப்புடன் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தற்போது பயிர் சேதங்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்க ஆரம்பித்துள்ளது. 

இதனிடையே, நிலவிய சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த தொலைபேசி இணைப்புகளில் 20 மாவட்டங்களில் சுமார் 75% ஆனவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…