இலங்கை

நெடுந்தீவு கடற்பகுதியில் பெருந்தொகை சிகரெட்டுகள் மீட்பு

நெடுந்தீவு தெற்கு கடற்பகுதியில் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 

கடந்த 3ஆம் திகதி, நெடுந்தீவுக்கு தெற்கு கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கடலில் மிதந்து வந்த 9 பொதிகளை கடற்படையினர் மீட்டு, அவற்றை சோதனையிட்டனர். 

சுமார் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள், 150 அழகுசாதன கிரீம்கள், மற்றும் வேறுபொருட்கள் 10 கைக்கடிகாரங்கள் என்பன அந்த பொதிகளில் காணப்பட்டுள்ளன. 

கடத்தல்காரர்கள், கடற்படையினரின் படகினை கண்ணுற்று, பொதிகளை கடலுக்குள் வீசி விட்டு தப்பி சென்று இருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். 

அதேவேளை, மீட்கப்பட்ட பொருட்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக, நெடுந்தீவு பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…