இலங்கை

வாழைச்சேனையில் இரண்டு துப்பாக்கிகள் மீட்பு

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவின், பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில், 20ஆம் கட்டை பகுதிக்கு அருகில் உள்ள தொலைபேசி கம்பம் ஒன்றின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதன்போது, மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்றும், அதற்குப் பயன்படுத்தப்படும் 4 தோட்டாக்களும் மற்றும் வெளிநாட்டுத் தயாரிப்பான ரிவோல்வர் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இன்று (08) அதிகாலை வேளையில், வலான மத்திய ஊழல் ஒழிப்புத் தாக்குதல் பிரிவின் அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இந்த துப்பாக்கிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக வாழைச்சேனைப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…