No products in the cart.
மனுசத் தெரண – டயலொக் நிவாரண பணி தொடர்ந்து முன்னெடுப்பு!
டித்வா புயல் காரணமாக சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட மனுசத் தெரண – டயலொக் நிவாரண நடவடிக்கை இன்று (11) 14வது நாளாகவும் தொடர்கிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தெரண பிரதான அலுவலகத்திற்கு கிடைத்த உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கும் பணி இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.
நேற்று கூட, ஏராளமான நன்கொடையாளர்கள் மனுசத் தெரண நிவாரண நடவடிக்கைக்கு உதவி பொருட்களை தாங்கி தெரண பிரதான அலுவலகத்திற்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.















