இலங்கை

இலங்கைக்கு வரி விதித்த அமெரிக்கா – ட்ரம்ப்க்கு ஜனாதிபதி அநுர கடிதம்

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள வரி கொள்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அமெரிக்காஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று பேசிய தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்படி, வெள்ளை மாளிகை கடிதம் பெறப்பட்டதை ஒப்புக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தனது கடிதத்தில், தாக்கத்தைக் குறைப்பதற்கான சாத்தியமான வழிகள் மற்றும் இலங்கை எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வரிகளைக் குறைக்க ஒத்துழைக்குமாறும் அந்த கடிதத்தில் கோரியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அண்மையில் பரஸ்பர விதிகளை அறிமுகப்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி, இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 வீத வரி விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…