இலங்கை

கோசல நுவனின் மறைவு குறித்து ஜனாதிபதி பதிவு

திடீர் மாரடைப்பு காரணமாக காலமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவனுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கவலையானபதிவு குறிப்பொன்றை இட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பதிவு,

“பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது.”
உங்களை இழந்தது மிகப்பெரிய இழப்பு…

நீங்கள் விரும்பும் நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

சகோதரர் கோசலா,
உங்களுக்கு புரட்சிகரமான வணக்கம்!”

கடந்த பொதுத் தேர்தலில் ருவன்வெல்ல தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை 06ஆம் திகதி காலமானார்.

அவர் இறக்கும் போது அவருக்கு 38 வயது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…