இலங்கை

ஊவா மாகாண பாடசாலைகளை திறப்பது தொடர்பான அறிவிப்பு

ஊவா மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளையும் இம்மாதம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். 

இன்று (16) ‘அத தெரண BIG FOCUS’நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளைத் திறக்க முடியாமைக்கு முக்கிய காரணம் போக்குவரத்து அசௌகரியங்கள் அல்லது நிவாரண முகாம்கள் இயங்குவதே ஆகும் என்றும் அவர் கூறினார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…