No products in the cart.
சிறையில் இருந்து வெளியே வந்தார் சாமர
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த போது நடைபெற்ற மோசடி தொடர்பான வழக்கு வழக்கு இன்று 08ஆம் திகதி கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த நீதவான் பிணையில் செல்ல அனுமதித்ததோடு, சந்தேக நபர் வெளிநாடு செல்லத்தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.