இலங்கை

இன்றைய பாராளுமன்ற அமர்வு ஜனாதிபதி வருகை!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று 19 பாராளுமன்றத்திற்கு வருகை தரவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்கும், சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீட்டை நிறைவேற்றிக்கொள்வதற்காக நடைபெறும் விவாதத்தில் கலந்துகொள்வதற்காகவே அவர் வருகை தருகின்றார். 

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீடு இன்று நிறைவேற்றப்படவுள்ளது. 

2026 ஆம் ஆண்டிற்குரிய 500 பில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த குறைநிரப்பு மதிப்பீட்டை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…