இலங்கை

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு!

இன்று (24) கொழும்பு தங்கச் சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. 

உலக சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ள நிலையில், இலங்கையிலும் இன்று (24) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதன்படி, 24 கரட் தங்கப் பவுன் (8 கிராம்) ஒன்றின் விலை இன்று ரூ. 354,000 ஆகப் பதிவாகியுள்ளது. நேற்று (23) இதன் விலை ரூ. 352,000 ஆகக் காணப்பட்டது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று ரூ. 2,000 இனால் விலை அதிகரித்துள்ளது. 

அதேபோல, 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை இன்று ரூ. 327,500 ஆக பதிவாகியுள்ளது. நேற்று இதன் விலை சுமார் ரூ. 325,600 ஆகக் காணப்பட்டது. இதுவும் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பைக் காட்டுகிறது. 

உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,500 அமெரிக்க டொலர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளமையே இந்த விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…