உலகம்

சீனா வைத்தியசாலை தீ விபத்தில் 20 பேர் உயிரிழப்பு!

வட சீனாவில் வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் தலைநகர் பீஜிங்கிலிருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹெபெய் மாகாணத்தில் உள்ள செங்டே நகரில் வைத்தியசாலையிலேயே செவ்வாய்க்கிழமை இரவு 9:00 மணியளவில் (உள்ளூர் நேரம்) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தை அடுத்து வைத்தியசாலையில் இருந்தவர்கள் மேலதிக கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

வைத்தியசாலை தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…