கிரிக்கட்விளையாட்டு

நியூசிலாந்து டி-20 தொடரில் திலக் வர்மாவுக்கு ஓய்வு – அணியில் மாற்றம்!

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரிலும் விளையாட உள்ளது. 

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டி தொடர் எதிர்வரும் 11-ம் திகதி தொடங்குகிறது. 

இருபதுக்கு 20 தொடர் எதிர்வரும் 21-ம் திகதி ஆரம்பமாக உள்ளது. 

நாக்பூர், ராய்ப்பூர், கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. 

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகளில் இருந்து இந்தியாவின் அதிரடி வீரரான திலக் வர்மா விலகி உள்ளார். 

திலக் வர்மாவுக்கு ராஜ்கோட்டில் வயிற்றுப் பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

நேற்று காலை வைத்தியசாலையில் இருந்து அவர் வௌியேறினார். தற்போது சீராகவும், நல்ல முன்னேற்றத்துடனும் உள்ளார். 

மீதமுள்ள 2 டி20 போட்டிகளில் திலக் வர்மா பங்கேற்பது அவரது உடற் தகுதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 56 ஆவது லீக் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. நாணய சழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 20 ஓவரில் 155 ஓட்டங்களை…