இலங்கை

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – புதுப்பித்த தகவல்

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (09) காலை 10.00 மணி நிலவரப்படி, பொத்துவிலிலிருந்து கிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை (10) மாலை யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை இடையே இலங்கை கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக திணைக்களம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அதன்படி, அடுத்த மூன்று நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ, மேற்கு, ஊவா, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவ்வப்போது மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…