இலங்கை

யாழில் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம், ஐந்து சந்திப் பகுதியில் சுமார் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்றையதினம் (10) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய,
யாழ்ப்பாணம் பொலிஸ் போதைத் தடுப்புப் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது குறித்த நபரிடமிருந்து சுமார் 3,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…