இலங்கை

சேர்பெறுமதி வரி சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (11) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். 

VAT வரி (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு 2025.04.09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன் குழு நிலையில் சட்டமூலம் ஆராயப்பட்டு திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து மூன்றாவது மதிப்பீட்டையடுத்து வாக்கெடுப்பு இன்றி சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

இந்தச் சட்டமூலம் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

அதற்கமைய, இந்த சட்டமூலம் 2025 ஆம் ஆண்டில் 4 ஆம் இலக்க சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமாக அமுலுக்கு வரும்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…