இலங்கை

அதிகரித்த தங்கத்தின் விலை!

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 11 ஆம் திகதி 3200 அமெரிக்க ​டொலர்களை (900,000 ரூபாய்க்கு மேல்) தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அதன்படி, உலக சந்தையில் தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்தது இதுவே முதல் முறை என்று குறிப்பிடப்படுகின்றது. 

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகப் போரின் விளைவாக தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 

முதலீட்டாளர்கள் தங்க இருப்புகளுக்கு முன்னுரிமை அளித்து, பாதுகாப்பான சொத்துக்களுக்கு மாறுவதால் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. 

இதற்கிடையில், உலக சந்தையில் தங்கத்தின் விலைக்கு ஏற்ப, இலங்கையிலும் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 

கொழும்பு தங்கச் சந்தை இன்று 11ஆம் திகதி அறிவித்த தங்க விலை விபரங்களின்படி, 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 235,500 ரூபாயாகும். 

மேலும், 24 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 256,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…