இலங்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வரட்சியான வானிலை நிலவும்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (17) வரட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இன்று அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய வானிலை முன்னறிவிப்பில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதிகாலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் துகள் உறைபனி ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…